டெக்

மணிக்கு 300 கி.மீ....ஹெலிகாப்டர் என்ஜின்... உலகின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்

மணிக்கு 300 கி.மீ....ஹெலிகாப்டர் என்ஜின்... உலகின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த எம்டிடி (Marine Turbine Technologies) நிறுவனம் ஹெலிகாப்டர் எஞ்சினில் இயங்கும் ஒய்2கே 420 ஆர்ஆர் (Y2K 420RR) எனும் சூப்பர் பைக்கை வடிவமைத்துள்ளது. மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்லும் இந்த பைக் உலகின் விலை உயர்ந்த பைக் என்ற பெயரைப் பெற்றள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் ரோல்ஸ் ராய்ஸ் – ஆலீசன் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கேஸ் டர்பைன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களில் பொருத்தப்படும் இந்த எஞ்சின் மூலம், சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 365.3 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடிந்ததாகக் கூறுகிறது தயாரிப்பு நிறுவனம். ஆனால், மணிக்கு 400 கி.மீ. என்ற வேகத்தில் பயணிக்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

அந்த எஞ்சின் மூலம் 320 பிஎச்பி திறனையும், அதிகபட்சமாக 576.2 நியூட்டன் மீட்டர் சுழல் விசையையும் பெற முடியும் என்கிறார்கள் எம்டிடி நிறுவன பொறியாளர்கள். 34 லிட்டர் டேங்க் கொள்ளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஒய்2கே 420 ஆர்ஆர் மோட்டார் சைக்கிளின் விலை 1,50,000 பவுண்டுகள்.இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12.58 கோடி. இதன்மூலம் உலகின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் என்ற பெயரில் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்திலும் இது இடம் பெற்றுள்ளது.