டெக்

வியாழனில் வாயுக்கள் அடங்கிய செந்நிற புள்ளி..!

வியாழனில் வாயுக்கள் அடங்கிய செந்நிற புள்ளி..!

webteam

வியாழன் கிரகத்தில் வாயுக்கள் அடங்கிய செந்நிற புள்ளி படிந்துள்ளது நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜுனோ விண்கலம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு ஜுனோ விண்கலத்தை அந்த கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இணைத்திருக்கிறது. இந்த ஜூனோ விண்கலத்தில் இணைக்கப்பட்ட கேமரா ஜூலை 2016 முதல் வியாழன் கிரகத்தை சுற்றிவந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது ஜூனோ சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய கிரகமான வியாழன் கிரகத்தில் வாயுக்கள் அடங்கிய செந்நிற புள்ளி படிந்துள்ளது போன்ற புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ஜூனோ விண்கல ஆய்வின்படி, வியாழன் கிரகமானது மேகத்தில் இருந்து 3.107 மைல் (5,000 கி.மீ.) தொலைவில் நீள் வட்டப்பாதையில் உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.