டெக்

செவ்வாய்க் கிரகத்தில் உருளை விவசாயம் செய்யலாம்

செவ்வாய்க் கிரகத்தில் உருளை விவசாயம் செய்யலாம்

webteam

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உருளைக் கிழங்கு செடியினை வளரச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக தெற்கு பெருவியாவில் உள்ள பாம்பாஸ் டிலா ஜோயா பாலைவனம் ஒன்றில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அந்த கிரகத்தில் இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் விஞ்ஞானிகள் அந்த பாலைவனத்தில் ஏற்படுத்தினர். இந்தச் சூழலைத் தாக்குப்பிடித்து உருளைக்கிழங்கு வளர்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இது புதிய மைல்கல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.