அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவுக்குச் செல்லும் நபரின் பெயரை வெளியிட்டது.
1972-ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதர்கள் யாரும் நிலவுக்குச் சென்றதில்லை. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு இறுதியில் மனிதர்களை மிகப்பெரிய ராக்கெட்டான பிக் ஃபால்கேன் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பவுள்ளது.
அதன்படி ஜப்பான் நாட்டு தொழிலதிபரை ஸ்பேஸ் எக்ஸ் நிலவுக்கு அனுப்பவுள்ளது. பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யூசகு மேசவாவை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.