அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு தெளிவற்ற ரேடியோ சிக்னல்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது
தற்போது பூமியிலிருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து ரேடியோ சிக்னல்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனுக்கு நெருக்கமாக உள்ள நட்சத்திரங்களில் இருந்து 12 வது இடத்தில் உள்ளது
புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள Arecibo Observatory எனும் ரேடியோ தொலைகாட்டியின் ஊடாகவே ஞாயிறன்று இந்த ரேடியோ சிக்னல்கள் பரவலாக காணப்பட்டுள்ளது. இந்த ரேடியோ சிக்னல்கள் ராஸ் 128 எனும் நட்சத்திரத்திலிருந்தே வெளிவருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆரேய்போவின் கிரக நிலைத்தன்மையின் ஆய்வகத்தில் புவேர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ரேடியோ சிக்னல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வெளிவருவதை கண்டுள்ளனர். இந்த ரேடியோ சிக்னல்கள் வெளியாவதற்கு ஏலியன்கள் தான் காரணமா என உறுதியாகக் கூற முடியாது என புவேர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆபெல் மென்டெஸ் தெரிவித்துள்ளார்