ஜியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் பிப்ரவரி 14ஆம் வெளியிடவுள்ளது.
சீன நிறுவனத்தை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி மாடல் போன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் வெளியான ரெட்மி நோட் 4 வாடிக்கையாளர்கள் இடையே அதிகப்படியான விற்பனை அடைந்துள்ள நிலையில், தற்போது வெளியாகவுள்ள ரெட்மி நோட் 5 எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி வரும் 14ஆம் தேதி ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் இரண்டு ரகங்களில் வெளியாகவுள்ளது. நோட் 5ஐ பொருத்தவரையில் 2ஜிபி ரேம் ரகம் ரூ.7,800க்கும், 3ஜிபி ரேம் ரகம் ரூ.8,800க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நோட் 5 ப்ளஸில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் மெமரியுடன் ரூ.9,700க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் மெமரியுடன் ரூ.12,700க்கும் விற்கப்படும். நோட் 5ல் 5.7 இன்ஞ் டிஸ்ப்ளேவும், 3,300 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. நோட் 5 ப்ளஸ்-ல் 5.99 இன்ஞ் டிஸ்ப்ளேவும், 4,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரையில் இரண்டிலுமே முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமராவும், பின்புறம் 12 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்ட் 7.1 நவுகட் இயங்கு தளத்தில் செயல்படும்.