Realme தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் Narzo சீரிஸ்ஸில், Narzo N55 என்ற மொபைல் போனை அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட் ஃபோனின் ஆரம்ப விலையானது ரூ. 10,999 முதல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் குறைவான விலையில் Narzo N53 என்ற மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது Realme.
அதன்படி இதன் விலையானது ரூ.8,999 முதல் விற்பனை செய்யப்படவிருக்கிறது. மற்ற ஃபோன்களை விட பார்ப்பதற்கு லுக்காகவும், ஸ்லிம்மாகவும் அறிமுகம் செய்யப்படும் Narzo N53 மொபைல், வரும் மே 24ஆம் தேதி முதல் ரூ.1000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருவதாக ரியல்மீ தெரிவித்துள்ளது.
Realme Narzo N53 மொபைல் ஃபோன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் என இரண்டு வகையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் மொபைலின் விலையானது ரூ.8,999-ல் தொடங்கி ரூ.10,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபெதர் கோல்ட் மற்றும் ஃபெதர் பிளாக் என இரண்டு விதமான வண்ணங்களோடு கிடைக்கிறது.
Narzo N53 முதல் விற்பனையானது, வரும் மே 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Amazon மற்றும் realme.com முதலிய ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்த பொதுதள விற்பனைக்கு முன்னதாக, ஒரு சிறப்பு விற்பனையை செய்யவும் ரியல்மீ திட்டமிட்டுள்ளது. அதன்படி சிறப்பு விற்பனையானது, மே 22ஆம் தேதியன்று மதியம் 2 முதல் 4 மணி வரை நடக்கும். அந்த 2 மணி நேர சிறப்பு விற்பனை லைவ்-ல் இருக்கும் என்பதையும் ரியல்மீ தெரிவித்துள்ளது.
* 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.74-இன்ச் டிஸ்ப்ளே.
* 50 MP பின்புற கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா.
* 33W அதிவேக சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.
* 182g எடையுடன் Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
* 6GB ரேம் + 128GB ரோம் உடன் 12GB வரை விரிவாக்கக்கூடிய ரேம் கிடைக்கிறது மற்றும் 2TB வரை எக்ஸ்டர்னல் மெமரி சப்போர்ட்.
* 4G + ஆண்ட்ராய்டு 13 OS உடன் இயங்குகிறது
* 150 சதவீத அல்ட்ரா பூம் ஸ்பீக்கர் மற்றும் சைடு கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.
விலையை பொறுத்த வரையில் ரூ.8,999 முதல் ரூ.10,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் விற்பனையில் ரூ.1000 வரையிலான தள்ளுபடியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.