UPI PT
டெக்

இனி கடன் வாங்க அலைய வேண்டாம்! UPI ஆப்களில் லோன் பெறும் வசதிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!

யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் கடன் வசதியையும் சேர்த்திருப்பது, அவ்வகை பணப்பரிமாற்றங்கள் பெருக உதவும் என யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அஷ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

webteam

கூகுள் பே, ஃபோன் பே போன்ற யுபிஐ பணப்பரிமாற்ற முறைகளில் ஒருவரின் வங்கிக் கணக்கில் உள்ள தொகைக்குட்பட்டுத்தான் பணம் அனுப்ப இயலும். ஆனால் இனி, குறிப்பிட்ட தொகை வரை வாடிக்கையாளருக்கு கடனாக கொடுக்க யுபிஐ நிர்வாகங்களுக்கு ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதித்துள்ளது.

இதனால் யுபிஐ வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் சிறிய தொகையை யுபிஐ சேவை தரும் நிறுவனம் மூலம் கடனாக பெற்று தங்கள் பணத் தேவையை நிறைவேற்ற இயலும். இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அஷ்வனி குமார், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் விரிவடையும் என்றும் இதற்கேற்ப வங்கிகள் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.