டெக்

“iOS 15.4 அப்டேட் செய்த பிறகு போனில் பேட்டரி வேகமாக குறைகிறது” - ஐபோன் பயனர்கள் புகார்!

“iOS 15.4 அப்டேட் செய்த பிறகு போனில் பேட்டரி வேகமாக குறைகிறது” - ஐபோன் பயனர்கள் புகார்!

EllusamyKarthik

கடந்த 14-ஆம் தேதியன்று iOS 15.4 அப்டேட் வெளியானது. மாஸ்க் போட்டிருந்தாலும் ஃபேஸ் (Face) ஐடியை பயன்படுத்தி ஐபோனை அன்லாக் செய்யும் வசதி உட்பட நூற்றுக்கணக்கான அம்சங்கள் இதில் அறிமுகமாகி இருந்தன. இந்நிலையில், இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை தங்கள் போனில் மேற்கொண்ட பயனர்கள் பலரும் புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்த அப்டேட்டுக்கு பிறகு தங்கள் போனில் பேட்டரி திறன் குறைந்து வருவதாக ஐபோன் பயனர்கள் ட்விட்டர் தளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

இதே மாதிரியான புகார்கள் iOS 15 அப்டேட்டுக்கு பிறகு எதிர் கொண்டதாகவும் புகார்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் பத்து நிமிடத்தில் பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிடுவதாகவும் பயனர்கள் சிலர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

“என் போனை சார்ஜ் போடாமல் பல நாட்கள் வரை பயன்படுத்துவேன். ஆனால் இந்த புதிய அப்டேட்டுக்கு பிறகு அரை நாளில் சார்ஜ் குறைந்து விடுகிறது” என ஐபோன் 13 புரோ மேக்ஸ் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

“எனது போனை 97% வரை சார்ஜ் செய்த பின்பு நான் சார்ஜிலிருந்து எடுத்தால் பேட்டரி திறன் 100% இருப்பதாக டிஸ்பிளே ஆகிறது. ஆனால் ஐந்து நிமிடத்திற்கு பிறகோ அல்லது போனை ரீ-ஸ்டார்ட் செய்தாலோ பேட்டரி திறன் குறைந்து விடுகிறது” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிலர் தங்கள் போனில் ஒரே சார்ஜ் சதவீதம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இருந்தாலும் இப்படி புகார்கள் குவிந்த வண்ணம் இருக்க ஆப்பிள் நிறுவனம் அதற்கு விளக்கம் ஏதும் கொடுக்காமல் உள்ளது. 

எந்தெந்த ஐபோன் மாடல்களில் iOS 15.4 அப்டேட் செய்யலாம்?

ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 Pro, ஐபோன் 13 Pro Max, ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 Pro, ஐபோன் 12 Pro Max, ஐபோன் 11, ஐபோன் 11 Pro, ஐபோன் 11 Pro Max, ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் Xr, ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 6s, ஐபோன் 6s Plus, ஐபோன் SE (1வது தலைமுறை), ஐபோன் SE (2வது தலைமுறை), ஐபாட் டச் (7வது தலைமுறை) ஆகிய ஆப்பிள் மாடல்களில் iOS 15.4 அப்டேட் செய்யலாம்.