நோபல்பரிசு பெற்ற ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட்,பீட்டர் ஹிக்ஸ், PT
டெக்

மறைந்தார் கடவுள் துகளின் நாயகன் ’பீட்டர் ஹிக்ஸ்’|அணு நிறை விஞ்ஞானத்தில் நிகழ்த்திய அசாத்திய சாதனை!

கடவுளின் துகள் என்று அறியப்பட்ட பீட்டர் ஹிக்ஸ் தனது 94 வயதில் காலமானார்.

Jayashree A

2013ல் நோபல் பரிசு பெற்றவரும், கடவுளின் துகள் என்று அறியப்பட்ட துகளை கண்டறிந்தவருமான பீட்டர் ஹிக்ஸ், செவ்வாய்கிழமை அன்று (ஏப்ரல் 9) தனது 94 வயதில் காலமானார்.

இவர் செய்ததுதான் என்ன? எதற்காக இவருக்கு நோபல்பரிசு கொடுக்கப்பட்டது ?என்பதை விளக்குகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் ..

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

”நீண்ட காலமாக அறிவியல் ஆய்வாளார்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். அதன்படி ஒரு அணுவானது எப்படி நிறையை கொண்டிருக்கிறது? அப்படி என்றால் அணுவுக்குள் இருக்கும் ஏதோ ஒன்றினால்தான் அணுவானது அதன் எடையை கொண்டிருக்கிறது அந்த துகள்தான் என்ன? என்று பல ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். இதில் குறிப்பாக இந்திய ஆய்வாளரான சத்தியேந்திரநாத் போஸ் என்பவர்தான் முதல்முதலில் இந்த சந்தேகத்தை எழுப்பினார். இருப்பினும், அணுவிற்குள் என்ன இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ”

”இதற்கு அடுத்தகட்டமாக பீட்டர் ஹிக்ஸ் என்பவர், அணுக்குள் இருக்கும் துகளை கண்டறிவதற்கு பல்வேறு முயற்சியை மேற்கொண்டார். 1960ல் இவர் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அதாவது ’எலக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களின் காரணமாக பொருட்களுக்கு மின் ஏற்றம் என்ற ஒன்று எப்படி கிடைக்கிறதோ... அதே போல ஏதோ ஒரு துகளின் காரணமாகதான் அனுக்களுக்கு நிறை என்ற குணம் கிடைக்கிறது’ என்பதை ஆணித்தனமாக கூறினார். அதனால்தான் கிடைக்காத அந்த துகளுக்கு ஆராய்ச்சியாளார்கள் ஹிக்ஸ் துகள்கள் என்று ஆரம்பத்தில் இதற்கு பெயரிட்டனர்.”

”அதன்பிறகு பல்வேறு விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிக்கமுடியாத துகள்களை தேடி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதில் ஒரு விஞ்ஞானி கண்டே பிடிக்கமுடியாத இந்த துகளுக்கு Gods Boson கடவுளின் துகள் என்று பெயரிட்டு, அதை ஒரு புத்தகமாக வெளியிட்டார். நாளடைவில் கண்டே பிடிக்கமுடியாத இந்த துகளை கடவுள் துகள் என்று பலரும் சொல்லி வந்தனர். ஆனால் கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

”ஆனால் கண்டே பிடிக்கமுடியாது என்று நினைத்திருந்த ஹிக்ஸ் துகள்களை பல்வேறு கட்ட ஆராய்சிக்குபிறகு 2012ல் ஐரோப்பாவில் இருக்கக்கூடிய san என்ற ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்தது. பல ஆண்டுகள் இந்த ஆய்வில் பலர் பணி செய்து, அணுக்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அதற்குள் இருக்கும் சிறுசிறு துகள்களை ஆராய்ந்து, கடைசியில் இந்த துகளை கண்டுபிடித்தனர்.”

பீட்டர் ஹிக்ஸ்

இந்த அறிவிப்பை அறிவிக்கும் பொழுது ஹிக்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். அச்சமயத்தில் அவர் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. பத்திரிகையாளார்கள் மத்தியில் அவர் பேசும் பொழுது, “ஒரு சில சமயங்களில், நாம சரியா இருப்பதை பார்த்து நமக்கு சந்தோஷம் தானே” என்றார்.

”அடுத்த ஆண்டு 2013 ல் இந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கும், ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருக்கும், ஹிக்ஸ் புலம் மற்றும் ஹிக்ஸ் போஸான் கருதுகோள்களின் வளர்ச்சி பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.”

எப்படி ஒரு துகளில் நிறை என்ற குணத்தை இருக்கும்? என்ற சந்தேகம் நமக்கு வரும் அதற்கு ஒரு விளக்கத்தையும் நாம் பார்க்கலாம்.

”ஒரு காற்று நிரப்பப்பட்ட பலூனை நமது தலையில் பரபரவென்று தேய்த்துவிட்டு, பிறகு பலூனை சிறு சிறு துகளுக்கு அருகில் கொண்டு சென்றால் அவற்றை ஈர்த்துக்கொள்ளும். இதற்கு நிலை மின்சாரம் என்று பெயர். அதாவது நமது தலையிலிருக்கும் மயிர்கால்கள் வழியாக சில எலட்ரான்கள் பலூனுக்கு கடத்தப்பட்டது. அப்பொழுது அந்த பலூன் எதிர்மின்னேற்றம் அடையும். நம் தலை நேர்மின்னேற்றம் கொண்டிருக்கும் ” என்கிறார்.

அணு வெடிப்பு

அதேபோல் ஒரு நிறையில் இருக்கும் வேறுபாட்டையும் நாம் தெரிந்துக் கொள்ளலாம். ஒரு குட்டி பொருளை சேசாக தள்ளினால் ஓடிவிடும். ஆனால் அதிக எடை கொண்ட பொருட்களை அதிக வேகமாக தள்ளவேண்டும்” என்கிறார். இதன் வேறுபாடுதான் நிறை என்கிறார்.

இந்த வேறுபாடு எப்படி வந்தது? என்பதை தெரிந்துக்கொள்ள, ”ஒரு நீச்சல் குளத்தில் ஒருவர் நீந்துவது சுலபம் அதே நீச்சல் குளத்தில் தண்ணீரானது பாகுபோல் இருந்தால் அதில் நீந்துவது மிக கடினம்.”

”இந்த துகள் வேறொரு துகளுடன் வினைபுரியும் பொழுது அந்த வேறொரு துகள் தனது இயக்கத்தில் தளர்வு ஏற்படும் அதுதான் நிறை என்கிறார். இதுதான் அணுக்களின் கட்டமைப்பு” என்கிறார்.

ஹிக்ஸ் போசான் Higgs Boson கடவுள் துகள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும் என்று கூறிய பீட்டர் ஹிக்ஸ் சமீபத்தில் இறந்தது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.