இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் கடந்த மாதம் 5ஜி நெட்வொர்க் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் G60 என்ற புதிய ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட.58 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவின் பாதுகாப்பிற்காகக் கொரில்லா கிளாஸ் 5 இருக்கிறது. G60 ஸ்மார்ட்போனில் 5ஜி திறன் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அப்டேட் கொடுக்கப்படும் எனவும் நோக்கியா நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கமாக மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
IP52 ரேட்டிங் இருப்பதால் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட்டாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரையில் டூயல் பேட்ண்ட் வைஃபை, புளூடூத் v5.1, மற்றும் NFC ஆகியவை இருக்கின்றன. 6GB RAM + 128GB வேரியண்ட் ரூ. 29,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
G60 ஸ்மார்ட்போனை நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 7-ம் தேதி வரை ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் நவம்பர் 8-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் நோக்கியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.