60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது நோக்கியா.
ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்பு செல்போன் சந்தையை கலக்கி வந்த நிறுவனம் நோக்கியா. ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு நோக்கியா போன்களின் மீதிருந்த மோகம் பின்னோக்கி சென்றது. அதன்பின் தாமதமாகவே மீண்டும் சந்தையில் ரீ-எண்ட்ரி ஆன நோக்கியா தற்போது பல புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. பழைய லோகோவில் இருந்த நீல நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் நோக்கியா வார்த்தை மாற்றப்பட்டுள்ளது. மேலும் நோக்கிய வார்த்தையின் எழுத்து வடிவமும் சற்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நோக்கியா போன்களின் வர்த்தகம் 21 சதவீத வளர்ச்சியையும், அதிகபட்ச எண்ணிக்கையையும் தக்க வைத்துக் கொண்டது. கடந்த நிதியாண்டில் 2.11 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய நோக்கியா நிறுவனத்தின் வருவாயை இரட்டை இலக்கங்களுக்கு கொண்டு செல்ல விரும்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் கூறியுள்ளார்.