ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் புதுவரவாக அமைந்துள்ளது ஒன் பிளஸ் நார்ட்.
6.44 அங்குல அமோல்டு டிஸ்பிளேயுடன் 1080x2400 ஹை பிக்சலில் இந்த போன் வெளி வந்துள்ளது. ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி அதிவேக பிராசஸரில் இந்த போன் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த போன், ஆண்ட்ராய்டு 10இல் இயங்குகிறது. 4115 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ளது. பாஸ்ட் சார்ஜிங்க் வசதியும் இதில் உள்ளது.
துல்லியமாக படம் பிடிப்பதற்காக நான்கு கேமராக்கள் ரியர் சைடில் உள்ளன. 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகளை இதில் பயன்படுத்தலாம். 184 கிராம் எடையுள்ள இந்த போன் ப்ளூ மார்பிள் மற்றும் கிரே ஓனிக்ஸ் வண்ணங்களில் கிடைக்கின்றன. யூ.எஸ்.பி டைப் சி வசதியோடு வெளிவந்துள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் ரெகக்னேஷன் வசதியும் இதில் உள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் விலை 27,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.