பென்னு விண்கல் PT
டெக்

மனித குலத்தின் மகத்தான சாதனை.. மெகா விண்கல்லின் Sample-ஐ பூமிக்கு கொண்டுவந்த NASA!

இந்தியா நிலவை ஆராய்ந்து கொண்டே, சூரியனை ஆராய ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவோ சூரியனை மையமாக கொண்டு சுற்றி வரும் மிகப்பெரிய விண்கல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வைத் தொடங்கி இருக்கிறது.

webteam

பென்னு விண்கல்லை தேடி புறப்பட்ட OSIRIS விண்கலம்!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவோடு, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் நாடுகளின் ஆய்வு நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட திட்டம் தான் OSIRIS. பூமி மற்றும் செவ்வாய்க்கு இடையே சூரியனை மையமாக கொண்டு சுற்றிவரும் மிகப்பெரிய விண்கல்லான பென்னு, சூரியனை சுற்றிவர ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகிறது.

விண்கல் பென்னு

"101955 பென்னு" என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த விண்கல்லில் தரையிறங்கி, அதன் மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் OSIRIS திட்டத்தின் நோக்கம்.

ஓசிரிஸ் ரெக்ஸின்

அதன்படி 2016 செப்டம்பர் 8 இல் OSIRIS-REx விண்கலம் ஏவப்பட்டது. 2017 செப்டம்பர் 22 இல் புவியைக் கடந்து, 2018 டிசம்பர் 3இல் பென்னு சிறுகோளில் இருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தது. அடுத்த பல மாதங்களை அது பென்னுவில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆராய்வதில் செலவிட்ட பின் ஒசைரிசு-ரெக்சு விண்கலம் பென்னுவை சென்றடைந்து, மாதிரிகளை சேகரிக்கும் பணிக்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியது.

7 வருடத்திற்கு பின் Sample-ஐ சேகரித்து பூமிக்கு திரும்பிய OSIRIS!

250 கிராம் எடை கொண்ட பென்னு விண்கல்லின் மாதிரியை சேகரித்த விண்கலம், 36 லட்சம் கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு மீண்டும் பூமியை வந்தடைந்தது. தாய் கலனில் இருந்து பிரிந்து மாதிரிகளை எடுத்து வரும் காப்சுயூல் எனப்படும் விண் பெட்டகம் உட்டா பாலைவனத்தில் இறங்கியது. பூமியின் வளிமண்டலத்தை விண்பெட்டகம் அடைந்தபோது அதில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. இருந்தும் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் உயரத்தை விண் பெட்டகம் அடைந்தபோது அதில் உள்ள பாராசூட் செயல்படத் தொடங்கி விண் பெட்டகத்தை பத்திரமாக தரை இறக்கியது.

OSIRIS REx with Asteroid Sample

உட்டா பாலைவனத்தில் மாதிரிகளை கொண்டு வந்த உடன் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் விண் பெட்டகம் நாசா மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மாதிரியை கொண்டு வந்து ஆராய்ச்சியை தொடங்கிய NASA!

விண்வெளியில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்து சீரான அழுத்தத்தில் பூமியில் இறக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த சவால் நிறைந்த பணியை நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்தனர்.

சேகரிக்கப்பட்ட விண் கல்லின் மாதிரியை கொண்டு சூரிய குடும்பத்தின் செயல்பாடு, சூரியனின் இயக்கம், கோள்களின் வளர்ச்சி, தோற்றம் போன்றவற்றை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.