டெக்

இன்ஸ்டாவில் புதிய அம்சம்; இந்தியாவில் அறிமுகமானது

இன்ஸ்டாவில் புதிய அம்சம்; இந்தியாவில் அறிமுகமானது

EllusamyKarthik

போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைத்தளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய அம்சமான ‘Take a Break’ இந்தியா உட்பட சில நாடுகளில் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் நீண்ட நேரம் இன்ஸ்டா தளத்தில் மூழ்கி இருப்பதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் இன்ஸ்டா தளத்தை ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரம் பயன்படுத்தினால் பிரேக் எடுத்துக் கொள்வதற்கான ரிமைண்டர்கள் கொடுக்கப்படுகிறது. 10, 20 மற்றும் 30 நிமிடங்கள் வரை இந்த ரிமைண்டர்களை பயனர்கள் செட் செய்து கொள்ளலாம் எனத் தெரிகிறது. அதன்படி அந்த டைம் லிமிட்டுக்கு மேல் இன்ஸ்டாவில் உலாவும்போது பிரேக்குக்கான ரிமைண்டர் கொடுக்கப்படுகிறது.  

இளைஞர்களின் நலன் கருதி இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய நாட்டின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தனியுரிமை கொள்கை மேலாளர் நட்டாஷா தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இப்போதைக்கு இதனை ஆப்பிள் iOS இயங்குதளம் கொண்ட பயனர்கள் மட்டுமே பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு பயனர்களும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.