டெக்

தீபாவளிக்கு வராத மாருதி சுசூகி இக்னிஸ் பொங்கலுக்கு வந்தது

தீபாவளிக்கு வராத மாருதி சுசூகி இக்னிஸ் பொங்கலுக்கு வந்தது

webteam

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்த மாருதி சுசூகி இக்னிஸ் பொங்கலுக்கு சந்தையில் களமிறங்கியுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் க்ராஸ் ஓவர் ரக எஸ்யூவி மாடலாக நேர்த்தியான வடிவமைப்புடன் மாருதி சுசூகி இக்னிஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

3700 மிமீ நீளம், 1660 மிமீ அகலம் மற்றும் 1595 மிமீ உயரம் கொண்டுள்ள இக்னிஸ் காரின் வீல்பேஸ் 2438 மிமீ. ஜப்பானிய தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்னிஸ் காரில் பகல் நேரத்தில் எறிய கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இக்னிஸ் கார் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் அதாவது ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனலாக செயல்படுகிறது. முன், பின் மற்றும் பக்கவாட்டில் பார்க்கிங் செய்ய உதவும் கேமராக்கள், (Suzuki’s adaptive Dual Camera Breaking system – DCBS)பாதுகாப்பாக பார்க் செய்யலாம்.

உட்புறம் உள்ள காரின் இன்டிரியரில் 2438 மிமீ வீல்பேஸ் கொண்டதால் சிறப்பான தோற்றத்துடன் அகலமான இடவசதி கொண்ட மாடலாக இக்னிஸ் விளங்கும். ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், இருவண்ண கலவையில் டேஸ்போர்டு, புதிய ஸ்டீயரிங் வீல் போன்ற அனைத்து புதிய தொழிநுட்பத்துடன் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

லேன் மேனேஜ்மென்ட் வசதிகளுடன் சுஸூகி அடாப்டிவ் டூயல் கேமரா பிரேக்கிங் சிஸ்டம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்னிஸ் கார் என்ஜினில் பெட்ரோலும் போட்டுக் கொள்ளலாம். டீசலும் போட்டுக் கொள்ளலாம். மாருதி சுஸூகி இக்னிஸ் கார் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.