டெக்

5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ!

5 கேமராக்களுடன் வருகிறது ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ!

webteam

எல்ஜி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘எல்.ஜி வி40’ தின்-க்யூ மாடலை வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடுகிறது.

தென்கொரிய நிறுவனமான எல்ஜி தங்கள் புதிய செல்போன் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில், புதிய ஸ்மார்ட்போனான 
வி40 தின்-க்யூ மாடலை வரும் 3ஆம் தேதி அமெரிக்காவின், நியூயார்க்கில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் அந்த போன் தென்கொரியாவில் வெளியாகிறது. பின்னர் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது. இந்த போனின் சிறப்பம்சம் என்னவென்றால், கேமராக்கள் தான். இந்த போன் 5 கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள்.

பின்புறம் 20 எம்.பியுடன் பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 எம்.பியுடன் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 13 எம்.பியுடன் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன. சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் என மூன்று நிறங்களில் இந்த போன் வெளிவருகிறது.

இதன் டிஸ்ப்ளே 6.4 இன்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 90 சதவிகிதம் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் 8 ரேம் மற்றும் ஆண்டாராய்ட் 9.0 இயங்குதளம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் அல்லது 256 ஜிபி இண்டெர்நெல் மெமரி இதில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இது ரூ.65 ஆயிரம் இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.