5G தொழில்நுட்பத்தை பயனாளர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியதாக மாற்றுவதற்கும், தயாரிப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் தங்கள் 5G தொழில்நுட்ப சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் jio மற்றும் OnePlus ஆகியவை இணைந்து செயலாற்ற இருக்கின்றன.
இந்தியாவில் பரிணாம வளர்ச்சியில் தனித்து நிற்கும் 5G தொழில்நுட்ப சூழலை கொண்டு வர, உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான OnePlus உடன் Reliance Jio இணைப்புக்கு ஒத்துழைத்துள்ளது. ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அனைத்து OnePlus 5G புராடக்ட்களும் Jio 'True 5G' தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் சுனில் தத் கூறுகையில், "5ஜி ஸ்மார்ட்போனின் உண்மையான சக்தியை ஜியோ போன்ற உண்மையான 5ஜி நெட்வொர்க்கால் மட்டுமே வெளிக்கொணர முடியும், இது ஒரு தனியான 5ஜி நெட்வொர்க்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. OnePlus போன்ற முன்னணி நிறுவனத்தின் புராடக்ட்களில் அனுபவிக்கக்கூடிய நூற்றுக்கணக்கான புதிய மற்றும் சக்திவாய்ந்த அனுபவங்களை True 5G செயல்படுத்தும்.
Jio True 5G நெட்வொர்க்கிற்கான அக்சஸ்ஸுடன் வரும் OnePlus புராடக்ட்களில் சமீபத்திய OnePlus 10 சீரிஸ், OnePlus 9R, OnePlus 8 சீரிஸ் மற்றும் Nord, Nord 2T, Nord 2, Nord CE, Nord CE 2 மற்றும் Nord CE 2 Lite போன்ற Nord புராடக்ட்களின் சீரிஸ்களும் அடங்கும். அதேபோல், OnePlus 9 Pro, OnePlus 9 மற்றும் OnePlus 9RT ஆகியவையும் விரைவில் ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கிற்கான அக்சஸ்ஸை பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இந்தியப் பகுதியின் தலைவருமான நவ்நித் நக்ரா கூறுகையில், "5ஜி தொழில்நுட்பத்துடன், பயனர்கள் உண்மையான தடையற்ற, வேகமான இணைய அனுபவத்தை அனுபவிப்பார்கள், அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்களின் தினசரி பயன்பாட்டிலிருந்து அவர்கள் கற்பனை செய்வதை விட பலவற்றைப் பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13- டிசம்பர் 18 முதல் OnePlus-ன் ஒருஆண்டு கால முடிவில் தகுதியான OnePlus மற்றும் Jio 5G பயனர்கள் ரூ.10,800 மதிப்புள்ள கேஷ்பேக் நன்மைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus 5G ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவு விலையானது பிரிமியம் பிரிவில் (ரூ. 30,000-ரூ. 45,000) மற்றும் இந்தியாவில் ரூ.20,000- ரூ.30,000 விலைப் பிரிவில் முன்னிலை வகிக்கிறது.