டெக்

ஒரே ராக்கெட்டில் 103 செயற்கை கோள்கள்.. பிப்ரவரியில் ஏவ இஸ்ரோ திட்டம்

ஒரே ராக்கெட்டில் 103 செயற்கை கோள்கள்.. பிப்ரவரியில் ஏவ இஸ்ரோ திட்டம்

webteam

பி.எஸ்.எல்.வி சி-37 என்ற ராக்கெட் மூலம் 103 செயற்கைக் கோள்களை பிப்ரவரியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்வெளியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

கடந்த வாரம், ஒரே நேரத்தில் 83 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது 20 செயற்கை கோள்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதால், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள்களில், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் அடங்கும்.

இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில், 103 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க இஸ்ரோ தயாராகி வருகிறது. இதில் 80 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை.

கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது.