டெக்

சாதனை படைக்கும் பிஎஸ்எல்வி ! அரைசதம் அடித்த இஸ்ரோ..!

சாதனை படைக்கும் பிஎஸ்எல்வி ! அரைசதம் அடித்த இஸ்ரோ..!

jagadeesh

சந்திரயான், செவ்வாய், ஆஸ்ட்ரோசாட், எஸ்ஆர்இ-1, நாவிக் ஆகிய முக்கிய விண்கலங்கள், செயற்கைக்கோள்களை ஏந்தி விண்ணில் பாய்ந்த பெருமை கொண்டது பிஎஸ்எல்வி. 

polar satellite lauch vehicle என்பதன் சுருக்கமே PSLV. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிரத்யேக தயாரிப்பு இந்த ராக்கெட். ஒவ்வொரு முறை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி தயாரிப்புக்கு ஆகும் செலவு 130 முதல் 200 கோடி ரூபாய். இதன் உயரம் 44 மீட்டர், அதாவது 144 அடி. சுற்றளவு 2.8 மீட்டர், எடை 295 முதல் 320 டன்கள் வரை. 1993-ஆம் ஆண்டு முதலில் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட், 2019 நவம்பர் 28ஆம் தேதி வரை 49 முறை விண்ணில் ஏவப்பட்டு செயற்கைக் கோள்களை சுமந்து சென்றிருக்கிறது. 

சந்திரயான், செவ்வாய், ஆஸ்ட்ரோசாட், எஸ்ஆர்இ-1, நாவிக் ஆகிய முக்கிய விண்கலங்கள், செயற்கைக்கோள்களை ஏந்தி விண்ணில் பாய்ந்த பெருமை கொண்டது பிஎஸ்எல்வி. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்து வெள்ளி விழா கடந்துள்ள பிஎஸ்எல்வி, விண்ணில் பாய்வதில் பொன்விழா காண்கிறது. இதுவரை 49 முறை செயற்கைக் கோள்கள், விண்கலங்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்களில் 46 முறை வெற்றியும், 2 தோல்வியும் ஒரு பகுதியளவு வெற்றியும் இருந்திருக்கிறது.

விண்ணில் பாயும் தேர்வில் 96 சதவிகித மதிப்பெண்களைப் பெற்ற பிஎஸ்எல்வி, முதலில் D என்ற வரிசையில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 1997ஆம் ஆண்டு முதல் C வரிசைக்கு மாற்றிய இஸ்ரோ, இன்று வரை அதே வரிசையில் ராக்கெட்டை ஏவி வருகிறது. தனது விண்வெளி திட்ட வரிசையில் C13 என்ற எண்ணை மட்டும் இஸ்ரோ கைவிட்டது. அதிகபட்சமாக 2016ல் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் சுமந்து சென்ற பெருமையும் பிஎஸ்எல்விக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.