சந்திரயான் 3 லேண்டர் ரோவர் PT
டெக்

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இறங்கவில்லையா?- சீன விஞ்ஞானியின் குற்றச்சாட்டும், விளக்கமும்

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் தரையிறங்கவில்லை. இந்தியாவின் சந்திரயான் நிலவின் தெந்துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு

Jayashree A

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்3 விண்கலமானது நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் அங்கு பல ஆராய்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் இரவு தொடங்க ஆரம்பித்ததும், ரோவரும் லேண்டரும் சூரிய ஒளி இல்லாததால், தனது வேலையை நிறுத்தியிருந்தது. மீண்டும் அப்பகுதியில் பகல் தொடங்கிய நிலையில் விக்ரம் லேண்டரை உயிர்பிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக லேண்டரை உயிர்பிக்க இயலவில்லை. காரணம் அங்கு நிலவிய தட்பவெட்பநிலை -200 அளவிற்கு இருந்ததால் லேண்டர் பழுதடைந்து இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் சந்திரயான் 3 நிலவின் தெந்துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு என சீனாவின் மூத்த விஞ்ஞானி உயாங் ஜியூன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஞ்ஞானி உயாங் ஜியூன்

தென் துருவத்திலிருந்து 619 கி.மீ தொலைவில் சந்திரயான் தரையிறங்கியிருக்கிறது என்றும் அதை நிலவின் தென் துருவமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து 'விஞ்ஞான் பிரச்சார்' நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களிடம் கருத்து கேட்டோம்.

”தென் துருவம் என்பது ஒரு புள்ளி. அதே போல் பூமியில் வடதுருவம், தென்துருவம் என்பது ஒரு புள்ளியை தான் குறிக்கும். உதாரணத்திற்கு நார்வே வடதுருவ நாடு அல்ல.. வடதுருவ பகுதி நாடு.

த.வி.வெங்கடேசன்

அதே போல் தான் சந்திரயான் தென் துருவப்பகுதியில் தான் இறங்கியது. தென் துருவப்புள்ளியில் இல்லை. ஆகவே.. தென் துருவம், தென் துருவப்பகுதி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. ” என்று கூறினார்.

ஆகவே... இனி நாம் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 இறங்கியது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்