டெக்

பீரியட், back டிராக் என எக்கச்சக்கமான டிராக்கரோடு வந்த ஐவாட்ச் சீரிஸ்.. புது அம்சங்கள் இதோ

பீரியட், back டிராக் என எக்கச்சக்கமான டிராக்கரோடு வந்த ஐவாட்ச் சீரிஸ்.. புது அம்சங்கள் இதோ

JananiGovindhan

ஆப்பிள் நிறுவனத்தின் 14வது ஐஃபோன் சீரிஸ் மொபைலுக்கு ஆதரவு கிடைத்ததை காட்டிலும் புதிய ஐவாட்ச் சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியதுதான் அதன் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்திருக்கிறது என்பது அதற்கு கிடைத்திற்கும் வரவேற்பை வைத்தே அறிய முடிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் ஐவாட்ச் சீரிஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, உலகம் முழுவதும் ஐவாட்ச் அணிந்தவர்கள் எப்படியெல்லாம் அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டது குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஒரு ஆவண வடிவில் ஆப்பிள் நிறுவனம் திரையிட்டிருந்தது.

அதன் பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐவாட்சான ஆப்பிள் ஐவாட்ச் 8-ஐ அறிமுகம் செய்தது. முந்தைய ஐவாட்ச் சீரிஸை ஒத்த அம்சங்களே ஐவாட்ச் 8ல் இருந்தாலும் கூடுதலாக இரண்டு புதிய முக்கியமான தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

அதில் ஒன்று உடல் வெப்பநிலை சென்சாரும், மற்றொன்று ஃபீரியட் ட்ராக்கும் உள்ளடக்கியிருக்கிறது. அதன்படி temperature sensor மூலம் உடலில் நடக்கும் சிறிய அளவிலான வெப்பநிலை மாற்றங்களையும் கணக்கிட முடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல பெண்கள் தங்களுடைய மாதவிடாய் மற்றும் கருவுறும் நாட்களை கணக்கிட்டுக்கொள்ள period prediction அம்சமும் உள்ளது. இதன் மூலம் மாதவிடாய் நாட்களை எளிதில் கணக்கில் கொள்ள முடியும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

இதுபோக, ஐவாட்ச் 8ல் Crash detection என்ற குறிப்பிடத்தக்க அம்சத்தையும் உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். அதாவது, வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்ட உடனே அந்த அதிர்வுகளை கொண்டு emergency contact-ல் உள்ளவர்களை தொடர்புகொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அம்சம் நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியமானதாக இருக்கிறது என்பதற்காக 1 மில்லியல் ஹவர் ரியல் டிரைவிங் மோடில் பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனம் சோதனை செய்திருக்கிறதாம். அதோடு low power mode வசதியையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் 18 மணிநேரமாக இருந்த ஐவாட்சின் பேட்டரி பவர் 36 மணிநேரம் வரை உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐவாட்ச் 8க்கு அடுத்தபடியாக ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வகை அறிமுகமாகியிருக்கிறது. இது விளையாட்டு வீரர் வீராங்கனைகள், டிரக்கிங் போன்ற மலையேற்ற சாகசம் செய்பவர்கள் போன்றோருக்காகவே தனித்துவமாக வெளியிட்டிருக்கிறது ஆப்பிள்.

இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் 2000 Nit brightness, night view போன்ற அம்சங்கள் இருக்கிறது. இதுபோக திடீரென ஒரு வழியில் சிக்கிக் கொண்டால் அதை உடன் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் siren signal என்ற அம்சமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தொலைந்துபோனவரை தேடி வருபவர்களுக்கு கேட்கும் வகையில் சைரன் ஒலி எழுப்பப்படும். அட்வென்ச்சர் ட்ரிப் போகும் போதும் அல்ட்ரா வாட்சில் இருக்கும் ஸ்பீக்கர் மூலம் ஃபோன் பேசிக் கொள்ளலாம். இது தெளிவாக கேட்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இதுபோக ஆக்‌ஷன் பட்டன் என்ற அம்சமும் இருக்கிறது. இதன் மூலம் சைரன் கொடுப்பதோடு, வொர்க் அவுட் செய்யும் போது ஆக்‌ஷன் பட்டனை ப்ரஸ் செய்தால் போது எளிதாக டிராக் செய்துக் கொள்ளலாம். டிரக்கிங் போகிறவர்களுக்கு back track என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது டிரக்கிங் போய் திரும்பும் போது வந்த பாதை மறந்துவிட்டால் GPSஐ கொண்டு இந்த back track மூலம் சென்றடையலாம். இதோடு, 20-55 டிகிரி சூழலில் வேலை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐவாட் 8ஐ போல 36 மணிநேரம் பேட்டரி லைஃப் கொடுத்திருக்கிறார்கள்.