இவர்களை கொண்டுதான் 'மியூஸ் வியரபிள்' என்ற நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் போன்று, மோதிர வடிவ தொழில் நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
இது ஸ்மார்ட் வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானது. 7 நாள்களுக்கு பேட்டரி பயன்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல இதன் மூலமாக பணப்பரிவர்த்தனையையும் செய்து கொள்ளலாம்.
இதனைப்போல 5 சுவரஸ்யமான உடல்நலனை கண்டறியும் கேஜெட்டுகள் என்ன என்பதை காண்போம்.
விரலில் அணியும் மோதிரம் மூலமாக தூக்கத்தின் நிலையை கண்டறிய முடியுமா?.அதுவும் சாத்தியம் தான். மோதிரம் வடிவில் தூக்கத்தினை கண்டறியும் சிறந்த கருவி உள்ளது.
இந்த மோதிரத்தை விரலில் அணிந்து கொள்வதன் மூலம் உள்ளங்கையில் இருந்து தூக்கம் சார்ந்த சமிக்ஞைகள் எடுக்கப்பட்டு மிகவும் துல்லியமான தகவல்களானது அந்த மோதிரத்திலேயே பதிவு செய்யப்பட்டு தூக்கம் சார்ந்த தகவல்களை பெற்று கொள்ள முடிகிறது.
உதாரணம்: Oura Ring
இரத்த அழுத்தத்தினை கண்டறியும் கருவி. இதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சார்ந்த தரவுகள் பெறுவதற்காக இக்கருவியானது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுகிறது.
இரத்த அழுத்தத்தினை கண்டறியும் மானிட்டரானது பயனரின் வலது அல்லது இடது கையில் சுற்றப்பட்டு கணக்கிடுவதன் மூலம் ரத்த அழுத்த அளவீட்டினை ஃபோனுக்குத் துல்லியமாக வழங்குகிறது. வீட்டிலேயே இருந்துகொண்டு இரத்த அழுத்தத்தின் அளவினை மிகவும் துல்லியமான அறிந்து கொள்ளலாம்.
உதாரணம்: The Qardioarm Blood Pressure Monitor
இந்த இரத்த குளுக்கோஸ் மீட்டரானது நீரிழிவு குளுக்கோஸை கண்டறிய பயன்படுத்தப்படுகின்றது. இந்த கருவியை கையில் பொருத்திக் கொள்ளும்போது ஃபோனின் சென்சாரை பயன்படுத்தி உடலில் உள்ள குழுக்கோஸின் அளவை கண்டறிய முடியும்.
இதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் போது விரல்களில் ஊசி கொண்டு குத்தும் போது ஏற்படும் வேதனையை குறைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது ஒரே இச்சாதனத்தை ஏழு நாட்கள் வரை பயன்படுத்தவும் முடியும்.
உதாரணம்: The Freestyle Libre 2
கையில் அணியக்கூடிய கடிகாரத்தைக் கொண்டு இதய துடிப்பினை துல்லியமாக ஈசிஜி அளவீடுகளின் மூலம் கண்டறியலாம்.
இருப்பினும், இதனைக் கொண்டு மாரடைப்பு, இரத்தக் கட்டிகள், பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்ற இதயம் தொடர்பான பிற நிலைகளைக் கண்டறிய முடியாது.
உதாரணம்: The Apple Watch
இதயத் துடிப்பை கண்டறியும் ஸ்மார்ட்வாட்ச் போலவே உடலின் ஃபிட்னஸ் பற்றி அறிந்துகொள்ள கடிகாரங்கள் உள்ளன. மிகவும் துல்லியமாகவும் மற்றும் எளிதானதாகவும் இதன் மூலம் ஃபிட்னஸை டிராக் செய்து கொள்ளலாம்.
கையில் கட்டியவுடனே நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் இதயத் துடிப்பினை அறிந்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தகவலை துல்லியமாக கண்காணிக்கவும் சேமிக்கவும் முடியும்.
உதாரணம்: Fitbit Charge 5