கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் சாதனை படைத்துள்ளது.
கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை பதிவு செய்து கொள்ளும் செயலியான கூகுள் போட்டோ, முன்பை விட சிறப்பாக புரிந்து கொள்ளும் என கூகுள் தெரிவித்துள்ளது.
சமீபத்திய கூகுள் டெவலப்பர் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் போட்டோ ஆப்-உடைய புதிய அப்டேட் மூலம் புதிய வசதிகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று சிறப்பாக பகிர்ந்து கொள்ளும், அதன்படி முன்பைவிட அதிக துல்லியமாக புகைப்படங்களை புரிந்து கொண்டு அவற்றில் எதை யார் யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களை பரிந்துரை செய்யும்.
பேஸ்புக்கின் மொமன்ட்ஸ் ஆப்-ல் வழங்கப்பட்டுள்ள அம்சத்தை போன்றே இதுவும் வேலை செய்யும். புகைப்படங்கள் அதன் கைபேசி எண்களை புரிந்து கொண்டு புகைப்படங்களை யார் யாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை பரிந்துரைக்கும். இதற்கான நோட்டிபிகேஷன் புகைப்படம் எடுக்கப்பட்டதும் வெளியாகும்.