டெக்

Doodle for Google போட்டியில் வென்ற மாணவருக்கு வீடியோகால் மூலம் தகவலை சொன்ன சுந்தர் பிச்சை

Doodle for Google போட்டியில் வென்ற மாணவருக்கு வீடியோகால் மூலம் தகவலை சொன்ன சுந்தர் பிச்சை

EllusamyKarthik

Doodle for Google போட்டியில் வென்ற அமெரிக்க மாணவருக்கு அந்த தகவலை வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. 2021 ஆம் ஆண்டிற்கான போட்டியில் அந்த மாணவன் வரைந்து அனுப்பிய படம் தேர்வாகி உள்ளது. அதை சொல்ல 11ஆம் வகுப்பு படிக்கும் அமெரிக்காவை சேர்ந்த மைலோ கோல்டிங் என்ற அந்த மாணவனுக்கு தான் வீடியோ கால் செய்துள்ளார் சுந்தயர் பிச்சை. 

“இந்த தகவலை மைலோவுடன் பகிர்வதுதான் இந்த வாரத்தினை சிறப்பாக்கி உள்ளது” என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். “நிலையற்ற மற்றும் கடினமான இந்த வாழ்க்கை சூழலில் அதை ஒரு பொருட்டாக கருதாமல் நம்பிக்கையை மட்டும் விடாப்பிடியாக கொண்டிருந்தேன்” என மாணவர் மைலோ தெரிவித்துள்ளார். 

கூகுள் நிறுவனம் டூடுள் வரையும் போட்டியை வைப்பது வழக்கம். அதன் மூலம் சிறப்பான டூடுள்களை தனது Search Engine முகப்பாக வைப்பதும் கூகுளின் வழக்கம்.