டெக்

கூகுளின் பர்த் டே ஸ்பெஷல் ‘ஸ்பின்னர் டூடுல்’

கூகுளின் பர்த் டே ஸ்பெஷல் ‘ஸ்பின்னர் டூடுல்’

webteam

இணையதள தேடுதலில் ஜாம்பவானாக விளங்கும் கூகுள், தனது 19 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. உலகின் பல முக்கிய நிகழ்வுகளை டூடுலில் கொண்டாடும் கூகுள் தனது பிறந்த நாளை முன்னிட்டும் சிறப்பு ஸ்பின்னர் டூடுலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் தான் சர்வதேச அளவில் முதன்முதலில் இணையதள தேடுபொறி சேவையை உருவாக்கியது. கூகுள் நிறுவனம் 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்டது. இணையதள தேடுதலில் இளவரசனான கூகுள் சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 4.5 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது.

கூகுள் தனது 19 பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வடிவமைத்துள்ளது.  டூடுலை பிளே செய்யும் போது சிறப்பு சர்ப்ரைஸ் ஸ்பின்னர் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்பின்னர் சுழலும் வடிவில் 10 பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பின்னரை சுழற்றும் போது டூடுல் இதற்கு முன் வெளியிட்டு ரசிகர்களால் பாராட்டப்பட்ட ஐசிசி சாம்பியன் ட்ராப்பி, மூச்சி பயிற்சி, ஸ்னேக் கேம், பேக் மேன் கேம், சில வல்லுநர்களின் பிறந்த தின கொண்டாட்டம், 44வது ஆண்டு விழா ஹிப் ஹாப் இசை டூடுல், கூகுள் மேப் கேலரி, காதலர் தின டூடுல், எர்த் டே டூடுல் போன்ற பல சுவாரஸ்ய டூடுல்களை அனிமேஷன் வடிவில் அமைத்துள்ளது. உங்களுடைய மொபைல் அல்லது டெஸ்க்டாப் வழியாக கூகுள் முகப்பினை அனுகி க்ளிக் செய்த பின்னர் அதில் தோன்றுகின்ற ஸ்பின்னரை சுழற்றி 19 வகையான விளையாட்டுகளை காணலாம். மேலும் இந்த சிறப்பு டூடுல் பற்றிய பயனர்களின் கருத்துகளை தெரிவிக்க feedback என்ற ஆப்ஷனையும் கூகுள் கொடுத்துள்ளது.