WhatsApp Pink Twitter
டெக்

புதிய அப்டேட் என வலம்வரும் “WhatsApp Pink” - சைபர் பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை!

புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் என்று பரவிவரும் “WhatsApp Pink” என்ற செயலியால் தகவல் திருட்டு நடைபெறுவதாகவும், அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

WHATSAPP PINK என்ற பெயரிலான இந்த செயலி வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் என்ற கவர்ச்சி வாசகங்களுடன் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.

“வாட்ஸ்அப் பிங்க்” செயலியை இன்ஸ்டால் செய்தால், ஒரிஜினல் வாட்ஸ்அப் செயலியின் BACKGROUND பிங்க் நிறத்தில் மாறி விடும். அதனாலென்ன என்று யோசிப்பதற்குள் OTP, CONTACTS, PHOTOS மற்றும் வங்கி விவரங்கள் களவு போய்விடும். பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி கொள்ளையில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என சைபர் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆண்ட்ராய்ட் மொபைல்போன் வைத்திருப்போர், கூகுள் ப்ளே ஸ்டோரால் பாதுகாப்பு சான்றளிக்கப்படாத, APK உள்ளிட்ட UNKNOWN லிங்க்குகள் மூலம் எதையும் பதிவிறக்கம் செய்யாமல் இருந்தாலே, ஏமாற்றம் அடைவதை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்.