டெக்

விண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2

விண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2

webteam

சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதற்காக மார்க் 3 ராக்கெட்டை ஏவும் ஒத்திகை நிறைவடைந் துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான் 2, ஏவப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு, கோளாறை சரிசெய்தது. நாளை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெர‌வித்துள்ளனர். 

மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ள சந்திராயன் 2, நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.