ஆசஸ் சென்ஃபோன் நிறுவனத்தின் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ மாடல் ஸ்மார்ட்போன்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன. வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.
அந்த வகையில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆசஸ் சென்ஃபோன் நிறுவனம், தங்கள் மேக்ஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்த மாடல் ஏற்கனவே ஆசஸ் ‘மேக்ஸ் ப்ரோ எம்1’ என்று வெளியாகி வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெற்றதால், தற்போது இதில் எம்2 மாடலை வெளியிடவுள்ளது. எம்1 மாடலை மூன்று ரகங்களில் வெளியிட்ட ஆசஸ் நிறுவனம் எம்2 மாடலை இரண்டு ரகங்களில் வெளியிடுகிறது. அவை மேக்ஸ் எம்2 மற்றும் மேக்ஸ் ப்ரோ எம்2 ஆகும். இந்த இரண்டு போன்களும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் மற்றும் விலை :
‘மேக்ஸ் ப்ரோ எம்2’
ரேம் : 4 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
டிஸ்ப்ளே : 6.3 இன்ச் (ஃபுல் ஹெச்.டி)
பின்புற கேமரா : 13 எம்பி மற்றும் 12 எம்பி (இரட்டைக் கேமரா)
செல்ஃபி கேமரா : 5 எம்பி
பேட்டரி திறன் : 5,000 எம்.ஏ.எச்
விலை : ரூ.19,000 (கணிக்கப்பட்டுள்ளது)
‘மேக்ஸ் எம்2’
ரேம் : 3 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 32 ஜிபி
டிஸ்ப்ளே : 6.3 இன்ச் (ஃபுல் ஹெச்.டி)
பின்புற கேமரா : 13 எம்பி மற்றும் 2 எம்பி (இரட்டைக் கேமரா)
செல்ஃபி கேமரா : 8 எம்பி
பேட்டரி திறன் : 4,000 எம்.ஏ.எச்
விலை : ரூ.13,700 (கணிக்கப்பட்டுள்ளது)