டெக்

பேட்டரி லைஃப்பை குறைக்கும் ஆப்ஸ்கள்

பேட்டரி லைஃப்பை குறைக்கும் ஆப்ஸ்கள்

Rasus

என்னதான் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போன்கள் வலம் வந்தாலும் அதில் உள்ள மிக பெரிய பிரச்னை பேட்டரி சார்ஜ் தான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும் நிலையை மாற்றியது ஸ்மார்ட் போன்கள். வேகத்தை விரும்பும் இன்றைய இளைஞர்கள் 4ஜி யை பயன்படுத்துவதும் பேட்ரிக்கு பேராபத்தாக அமைகிறது. அதுதவிர கீழ்க்கண்ட ஆப்ஸ்கள் பேட்டரி லைஃப்பை அடியோடு அழித்துவிடுகிறது.

வெளியே கிளம்புவதற்கு முன் சகுணம் பார்க்கும் நிலை மாறி பேட்டரி ஃபுல் சார்ஜில் உள்ளதா என்ற நிலை வந்துவிட்டது. உயர்ரக பேட்டரியை பயன்படுத்துவது, போன் திரையின் டிஸ்பிளே ஒளியை குறைத்து பயன்படுத்துவது, பவர் சேவிங் என்னும் சேமிக்கும் வசதியை பயன்படுத்துவது, இதையெல்லாம் தாண்டி நம் போனில் குடியிருக்கும் சில ஆப்ஸ்கள் பேட்ரியைக் கொலை செய்கிறது.

ஸ்மார்ட் போனில் கேண்டி கிரஷ் சாகா ஆப், பெட் ரெஸ்க்யூ சாகா ஆப் என்ற புதிர் விளையாட்டுகள், சோல்ஜர் விளையாட்டு, கிளாஷ் ஆப் க்ளான்ஸ், கூகுள் பைல் சர்வீஸ், ஓஎல்எக்ஸ் ஆப்ஸ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவையும் செக்யூரிட்டி& ஆண்டிவைரஸ், ஆண்ட்ராய்டு வெதர் மற்றும் கிளாக் விட்ஜெட் போன்ற ஆப்ஸ்கள் பேட்டரியின் வாழ்வுத் திறனைக் குறைக்கின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனே இத்தகைய ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்வதன் மூலமோ அல்லது மேற்கண்ட ஆப்ஸ்களை குறைவாக பயன்படுவதன் மூலமோ பேட்டரி வாழ்நாளை கூட்டலாம்.