இன்று குழந்தைகளை நன்றாக வளர்ப்பதுடன் கவனமாக பார்த்து கொள்ளும் பொறுப்பும் பெற்றொர்களுக்கு உள்ளது. கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பிச்சை எடுக்க வைப்பது அல்லது உடல் உறுப்புகளுக்காக என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகிறது.
காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையைச் சேர்ந்த விஜய் ஞானதேசிகன் மற்றும் இளங்கோ என்ற இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணுதல்( ஃபேஷியல் ரெக்கக்னிஷன்) எனும் மென்பொருளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மென்பொருளின் உதவியுடன் ஃபேஸ்டேக்ர்( facetagr) எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதுவரை காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை அந்த ஆப்- பில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதன்பின், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்த இளைஞர்கள் நடத்திய சோதனை முயற்சியில், ஹரியானாவில் பெற்றொர்களிடம் இருந்து காணாமல் போன குழந்தை அலகாபாத்தில் பிச்சை எடுத்த குழந்தைகள் மத்தியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை மீட்டு பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆப் மூலம் காணாமல் போன குழந்தைகள் அரசு அமைப்புகள், என்.ஜி.ஒ.க்கள் அல்லது தனி நபர்களிடம் இருந்தால் எளிதாக கண்டுப்பிடிக்கலாம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது