டெக்

வெடித்து சிதறியது ரெட்மி: விளக்கம் அளித்தது ஜியோமி

வெடித்து சிதறியது ரெட்மி: விளக்கம் அளித்தது ஜியோமி

webteam

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் ரெட்மி ஃபோன் வெடித்து சிதறியது தொடர்பாக ஜியோமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வகை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சமீப காலமாக ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், ஆந்திர பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சூர்ய கிரண் என்பவரின் ரெட்மி நோட் 4 ஃபோன் அவரது கால்சட்டையில் வைத்திருந்தபோது வெடித்து சிதறியது. இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது ஜியோமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த ஃபோனிற்கு வெளிப்புறமாக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, மொபைல் வெடித்து சிதறியுள்ளது என்றும், இதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளது.