சமூக வலைதளமான ட்விட்டார் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இனி பதவு செய்யப்பட்ட ட்வீட்டுகளை திருத்தலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இருப்பினும் அது இப்போதைக்கு கட்டண சந்தாவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு வருவாயும் ஈட்டும் என தெரிகிறது.
இந்த புதிய அம்சம் பிரபலங்கள் தங்களது ட்வீட்டில் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
280 எழுத்துகளில் பதியத்தக்க ட்விட்டரில் இந்த புதிய அம்சம் பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.