கிருஷ்ணகிரியில் கோபத்தை தூண்டிய இளைஞரை யானை ஒன்றுவிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் 80 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இவற்றில் 20க்கும் அதிகமான யானைகள் உத்தனப்பள்ளி T.குருபரப்பள்ளி அருகே விளைநிலத்தில் புகுந்தன. இவற்றை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விரட்ட முயன்றதால் யானைகள் வழிதவறி அங்கேயே சுற்றிவருகின்றன.
இந்நிலையில், அவற்றில் ஓரு யானையை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால் கோபமடைந்த யானை அந்த இளைஞரை ஆக்ரோஷத்துடன் விரட்டியது. உடனே அந்த இளைஞர் அலறிஅடித்து ஓடினர். காலால் மண்ணை கிளறியபடி கோபத்துடன் அவரைத் தொடர்ந்து விரட்டிய யானை, அங்கிருந்த மக்களை கண்டதும் மேலும் கோபமானது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களையும் விரட்டத் தொடங்கியது. யானைகளை சீண்டிவிடும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.