தமிழ்நாடு

தமிழில் பெயரெழுதும்போது முன்எழுத்தையும் தமிழில் எழுதுக: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழில் பெயரெழுதும்போது முன்எழுத்தையும் தமிழில் எழுதுக: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

நிவேதா ஜெகராஜா

தமிழில் பெயர் எழுதினால், முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்றுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேரவையில் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடைமுறை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டுவரப்படவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்; பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், , இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர் திறன் பூங்கா திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

பூங்கா அமைப்பது குறித்து பேசுகையில், ‘கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில், இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.300 கோடியில் வருங்கால நகர் திறன் பூங்கா அமைக்கப்படும். விருதுநகர் குமாரலிங்கபுரத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும். திருவள்ளூர் செங்காத்தாகுளத்தில் ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா உருவாக்கப்படும். ரூ.150 கோடியில் 10 சிப்காட் தொழிற்பூங்காக்கள் மேம்படுத்தப்படும்’ போன்ற அறிவிப்புகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் அறிவித்துள்ளார்.

இதேபோல மழைக்கால தொழில் பாதிப்பு நிதியுதவியாக, உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 தரப்படுமென்றும் பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.