தமிழ்நாடு

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் கிராம மக்கள்

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் கிராம மக்கள்

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் இரண்டு தலைகளுடன் ஒட்டிய நிலையில் பிறந்த அதிசய பெண் கன்றுக்குட்டியை,  கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள புதூர் புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சதீஷ் (35) என்ற விவசாயி அவரது விவசாய தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். இவரது இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வரும் இவர், இரண்டு பால் மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து இன்று பெண் கன்று ஒன்றை ஈன்றது. இரண்டு தலைகளுடன் ஒட்டிப்பிறந்த அந்த கன்றுக்குட்டிக்கு நான்கு கண்களும், இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு என அதிசயமாக பிறந்துள்ளது. .இந்த தகவல் காட்டுத்தீ போல் அருகில் இருக்கும் கிராமங்களில் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிசய கன்றுக் குட்டியை பார்த்ததோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.