தமிழ்நாடு

சாதித்த பெண்களுடன் மாணவிகள் உரையாடல் : சென்னை மாநகராட்சி பள்ளியில் நிகழ்ச்சி

சாதித்த பெண்களுடன் மாணவிகள் உரையாடல் : சென்னை மாநகராட்சி பள்ளியில் நிகழ்ச்சி

webteam

சாதித்த பெண்களுடன் மாணவிகளை உரையாட வைத்த நிகழ்ச்சி சென்னை கொருக்குப்பேட்டை மகளிர் மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்றது.

அனைத்து துறைகளிலும் மாணவிகள் சாதிக்க வேண்டும் என்ற வகையிலும், அவர்களை துறை ரீதியாக ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையிலும் ஃபேஷன் டிசைனர்ஸ், பத்திரிகையாளர், தொழில் நிறுவனர்கள் உள்ளிட்ட துறை ரீதியாக சாதித்த பெண்களுடன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றை சென்னை கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதித்த 12 பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினர். அதற்கு சாதித்த பெண்களும் உரிய விளக்கங்களுடன் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கூறும்போது, இளம் மாணவிகளுக்கு தங்கள் படிப்புடன் கூடிய எதிர்கால திட்டத்தை வகுக்கவும், நம்பிக்கை எண்ணத்தை உண்டாக்கவும் இதனை செய்ததாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இளம் மாணவர்களையும் சாதித்த பெண்களுடன் உரையாடச் செய்யவுள்ளதாகவும் கூறினர். அத்துடன் அடுத்த வருடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாணவிகள் கூறும்போது, இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும், எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தனர். பல்வேறு சுவாரஸ்ய துறைகள் குறித்து தெரிந்துகொண்டதாகவும் கூறினர். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் இண்டர்நெட்டை பயன்படுத்தி, எவ்வாறு தங்கள் துறை ரீதியான அறிவினை பெறுவது என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.