சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதம் தற்போது வரை ஏற்கப்படாத நிலையில், நாளை அவர் வழக்குகளை விசாரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு அதிருப்தி தெரிவித்து, தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா கடித்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என வழக்கறிஞர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.