தமிழ்நாடு

யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை

யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை

webteam

ஓசூர் சுற்று வட்டாரப்பகுதிகள் அருகே உள்ள வனப்பபகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பபகுதிகளில் பல்வேறு குழுக்களாக சுமார் 80 யானைகள் முகாமிட்டுள்ளன. ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40 யானைகளும், அய்யூர் வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகளும், சூளகிரியில் நான்கு யானைகளும், நொகனூரில் 23 யானைகளும் முகாமிட்டுள்ளது. 

அந்த யானைகள் அங்கு விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடியிருப்புப் பகுதியில் புகுந்து மக்களை அச்சம்பட வைக்கின்றது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வன பகுதிகளில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டமுடியாமல் வனத்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நொகனூர் காப்புக்காட்டில் இருந்து 16க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. அந்த யானைகள் ஓசட்டி அருகே உள்ள மாந்தோப்பில் தஞ்சமடைந்தன. அவற்றை நொகனூர் வனப்பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் விரட்டினர். இதனையடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் விவசாய பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனபகுதிகளில் பல்வேறு குழுக்களாக உள்ள யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.