தமிழகத்தில் மிகக் கடுமையான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில் அதுகுறித்து முடிவெடுப்பதில் கால தாமதம் ஏன் என ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சி, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளை சந்திக்கிற நிலையில், மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் செயல் இழந்து கிடப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவாகக் கூடிய கொந்தளிப்பு நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.