கோவையில் கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விசாரணைக்காக இரு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பயிற்சியின் போது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், 2005ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மேலாண்மை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற விதிமுறைகள் என்ன? என்பதைக் காணலாம்.
பேரிடர் மேலாண் பயிற்சி விதிகள்:-
ஒத்திகைகளை மேற்கொள்வதற்கு முன்பு முழு புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும்
ஒத்திகை நிகழ்ப்போகும் இடம், நிகழ்த்துபவர், பங்கேற்பாளர்கள் முழுமையாக தயாரான பிறகே ஒத்திகை நடத்த வேண்டும்
பாதுகாப்பு கோணத்திலான வழிமுறைகளை பங்கேற்பாளர்களிடம் விவரித்த பிறகே ஒத்திகையை தொடங்க வேண்டும்
தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் கருத்தரங்கங்கள் நிகழ்த்துவதென்றாலும் முன் அனுமதி பெற வேண்டும்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய பரிந்துரைப்படி பல்வேறு நிறுவனங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
அதன் அடிப்படையில்தான் யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகளை வழங்க அறிவுறுத்தியுள்ளது
கல்வி நிறுவனங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்த விதிமுறைகள் தனியாக யுஜிசி-யால் வகுக்கப்படவில்லை