தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் 54 பெட்டிகளில் கிடைத்தது என்ன?

ராமேஸ்வரத்தில் 54 பெட்டிகளில் கிடைத்தது என்ன?

webteam

ராமேஸ்வரம் பகுதியில் கிடைத்துள்ள ஆயுதக் குவியல்கள் 35 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

தங்கச்சிமடம் பகுதியிலுள்ள அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வீட்டிற்கு கழிவுநீர் கிணறு தோண்டும் பணியின் போது ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகள் போன்றவை கிடைத்துள்ளன. 54 பெட்டிகளில் 10 ஆயிரம் தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பெட்டிகளில் கையெறி குண்டுகள், இது மட்டுமல்லாது கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் 4 பெட்டிகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றில் இலகு ரக இயந்திர துப்பாக்கிகளான எல்எம்ஜி ரகத்தில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 76 சிறிய பெட்டிகளில் இருந்தது. தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 9 சிறிய பெட்டிகளில் கிடைத்துள்ளன. எஸ்எம்ஜி எனப்படும் இயந்திர துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 4 பெட்டிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர டெட்டனேட்டர்கள், ராக்கெட் லாஞ்சர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் துருப்பிடித்த நிலையில் கிடைத்துள்ளன. கண்ணி வெடி பெட்டிகள், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் திரி, ஜெலட்டின் குச்சிகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எனக் கூறப்படுகிறது.