தமிழ்நாடு

ஜெயக்குமார் வீட்டில் குவிந்த போலீஸார் - கைது நடவடிக்கையின் போது நடந்தது என்ன?

ஜெயக்குமார் வீட்டில் குவிந்த போலீஸார் - கைது நடவடிக்கையின் போது நடந்தது என்ன?

ஜா. ஜாக்சன் சிங்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்த போது அங்கு நடந்தது என்ன என்பது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49-வது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்கினர். அந்த சமயத்தில், அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை சில அதிமுகவினர் கழற்றினர். பின்னர் அவரை மேல் ஆடை இன்றி சாலையில் அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோ வெளியான நிலையில், நரேஷ் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட அதிமுகவினர் 40 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

முன்னதாக, ஜெயக்குமாரை கைது செய்வதற்காக 20-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். பின்னர், அவரது கைது செய்ய வந்திருப்பதாக போலீஸார் கூறினர். ஆனால், ஜெயக்குமார் கைது நடவடிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பொறுமையுடன் பதிலளித்த போலீஸார், கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருமாறு கூறினர். இருந்தபோதிலும், ஜெயக்குமார் தொடர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிவிட மாட்டேன்" என அவர் கூறினார்.

அப்போது அங்கு வந்த ஜெயக்குமாரின் மனைவி ஜெயக்குமாரியும், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இவ்வாறு 3 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்து அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

இன்றைய லைவ் அப்டேட்ஸ்>https://t.co/UqOrrIa9FO #Jeyakumar | #AIADMK | #DMK | #LocalBodyElections | #Police pic.twitter.com/WqjrM41Kno
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 21, 2022