தமிழ்நாடு

கருணாநிதி உடல்நிலை: சென்னை வருகிறார் மமதா பானர்ஜி

கருணாநிதி உடல்நிலை: சென்னை வருகிறார் மமதா பானர்ஜி

webteam

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அதுகுறித்து விசாரிப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி சென்னை வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு பணிக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 6 மணியுடன் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் பழனிசாமியுடன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை ராஜாஜி அரங்கத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் அடைந்துள்ளது என்ற செய்தியை அறிந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி சென்னை வருகிறார். இதற்கிடையே கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.