தமிழ்நாடு

பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு

பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு

webteam

பிரதமருக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை ஏற்காததால்,

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என அய்யாக்கண்ணு அறிவித்தார். இதற்காக அவர்கள் வாரணாசி செல்லவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அய்யாக்கண்ணு பாஜக தலைவர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல், தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமித்ஷாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ’’இந்த சந்திப்பு மன நிறைவை தருகிறது. பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை’’ என்று தெரிவித்தார்.