தமிழ்நாடு

கோமுகி அணையில் தண்ணீர் திறப்பு

கோமுகி அணையில் தண்ணீர் திறப்பு

Rasus

கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகம் இதனை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அணையில் இருந்து பாசனத்திற்காக முதல்கட்டமாக 15 நாட்களுக்கு 110 கனஅடி தண்ணீரும், அடுத்த 45 நாட்களுக்கு 220 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.இதன் மூலம் வடக்கனந்தல், செல்லம்பட்டு, மண்மலை உள்ளிட்ட ஏழு கிராம விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.