சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மூடப்பட்டது.
பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயதான அலுவலர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பூவிருந்தவல்லி மருத்துவமனை மூடப்பட்டு அவ்விடம் தடைசெய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூவிருந்தவல்லி நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிற நோய்களுக்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வரும் நாட்களில் சிகிச்சையானது அருகில் உள்ள தாய் சேய் நல மையத்தில் வைத்து அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000-த்தை கடந்திருந்த நிலையில் சென்னையில் நேற்று மட்டும் 279 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.