தமிழ்நாடு

விருதுநகர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்ற கோரிக்கை

விருதுநகர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்ற கோரிக்கை

kaleelrahman

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்,  பிபிஇ கிட் உடை, கையுறை என தங்களை தற்காத்துக் கொள்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவர்கள் இதை பயன்படுத்தி முடித்ததும் அதை முறையாக அகற்ற வேண்டும்.

ஆனால் அதை முறையாக அகற்றாமல் அந்த கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். இதனால் அருகில் இருக்கும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவமனை வளாகத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.