தமிழ்நாடு

மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

webteam

விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போனதால், அரசு நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ளது மரக்காணம். தமிழகத்தில் வேதாரண்யத்திற்கு அடுத்த படியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யும் இடமாக மரக்காணம் திகழ்கிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, உப்பளம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த உப்பு உற்பத்தியை நம்பி, சுமார் 500 குடும்பங்கள் மரக்காணம் பகுதியில் மட்டும் உள்ளன. மேலும் வெளியூர்களில் இருந்து வேலைக்கு வருபவர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழையால் பாதிப்படைந்த தங்கள் வாழ்வாதாரத்திற்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.