தமிழ்நாடு

விழுப்புரம்: பாதாள சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம்: பாதாள சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சாலை மறியல்!

webteam

பாதாள சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணப்ப தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர், தொடர்ந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து தேங்கி நிற்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது என்றும், மூன்று மாதங்களாக தொடர்ந்து பாதாள சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் விழுப்புரம் நகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி, விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரைமணி நேரத்திற்கும் மேலாக இந்த சாலை மறியல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விரைந்து வந்த தாலுக்கா காவல்துறையினர் உடனடியாக பிரச்னைகள் சரி செய்யப்படும் என பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.